மதுரை மாவட்டம் உசிலம்பட்டி புதன்கிழமை வாரசந்தையில் ஆடு மாடு கோழிகளுக்கு ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சியில் இருந்து சீட்டு பண வசூலிக்க கூடாது என கூறி விவசாய சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.உசிலம்பட்டி தினசரி சந்தை திடலில் வாரம் புதன்கிழமை ஆடு மாடு கோழிகளுக்கு வாரச்சந்தை நடைபெறும் இதில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் வருகின்ற ஆடு மாடு கோழிகளுக்கு சீட்டு பணம் வசூல் செய்வார்கள். சந்தையின் பாதை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக் கூறியும் பாதைக்கு சாலை அமைத்து தர கோரியும் யாரும் சீட்டுப்பணம் வசூலிக்க கூடாது என கூறி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் நேதாஜி தலைமையில் மற்றும் விவசாயிகள் வாரச்சந்தை சீட்டு வசூல் பண்ணும் நபர்களிடம் கோரிக்கை வைத்து வசூல் செய்யும் நபர்களிடம் சாலையில் சரியாக அமைத்து கொடுக்கும் வரை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரும் வரை பணம் வசூல் செய்யக் கூடாது எனக்கூறி திருப்பி அனுப்பினார். இதனால் சந்தை சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.உசிலம்பட்டி சந்தையை நகராட்சி நிர்வாகமும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தருவதில்லை எனக்கூறி இப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உசிலை மோகன்
You must be logged in to post a comment.