மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கள்ளர் கல்விக் கழகத்தின் கீழ் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி செயல்பட்டு வருகின்றது.இதன் தலைவர் செயலாளர்கள் நியமனம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்நிலையில் கள்ளர் கல்விக்கழகத்தின் தலைவர் என்று கூறிக் கொண்டு அய்யர் என்பவர் தன்னிச்சையாக கூட்டங்களை நடத்தி உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியை சென்னையிலுள்ள டாக்டர் கலைஞர் கருணாநிதி அறைக்கட்டளை தத்து எடுக்க ஆவண செய்யுமாறு முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் கல்லூரி கல்வித்துறைக்கும் மனு அனுப்பியுள்ளார்.இந்த மனுவை பரிசீலனை செய்யுமாறு கல்லூரி கல்வித்துறை இயக்குநர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.இதனைக்கண்டித்தும் தேவர் கல்லூரியை திமுக அறக்கட்டளைக்கு தாரை வார்க்க நினைக்கும் செயலை கண்டித்து இந்திய பார்வர்ட் பிளாக் சார்பில் உசிலம்பட்டி தேவர்சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் தமிழக அரசைக்கண்டித்து கோஷங்கள் எழுப்பட்டன.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையாக நேதாஜி வழக்கறிஞர் செல்வம் ராஜேஸ்வரன் குபேந்திரன் கௌதம் பால்பாண்டி ஒச்சு சின்னன் வெங்கடேஷ் உள்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

You must be logged in to post a comment.