அரசு கள்ளர் பள்ளிகள் ஆதிதிராவிடர் பள்ளிகளை பெயர் மாற்றம் செய்து அரசு பள்ளிகளாக மாற்ற ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையிலான கமிஷன் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.கள்ளர் பள்ளி பெயர் மாற்றத்திற்கு தென் மாவட்டங்களிலில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.குறிப்பாக மதுரை தேனி திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவங்களில் அரசு கள்ளர் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் வெள்ளிக்கிழைமயான இன்று ஒருநாள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபடுவார்கள் என அனைத்து கள்ளர் கூட்டமைப்புகள் மற்றும் அனைத்து பார்வர்ட் பிளாக் கட்சியினர் போராட்ட நடத்த அழைப்பு விடுத்திருந்த நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாப்பாபட்டி மேக்கிலார்பட்டி வி.பெருமாள்பட்டி பெருங்காமநல்லூர் உள்ளிட் பெரும்பாலான அரசு கள்ளர் பள்ளி மாணவ மாணவிகள் வகுப்பு புறக்களிப்பில் ஈடுபட்டதால் பள்ளிக்குழந்தைகளின்றி பள்ளி வெறிச்சோடிக் காணப்பட்டது.பள்ளியில் ஆசிரியர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு கிராமத்தில் அரசு கள்ளர் பள்ளிகள் பெயர் மாற்றத்தைக் கண்டித்து அனைத்து கள்ளர் கூட்டமைப்பு சார்பில் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் கள்ளர் பள்ளிகளை அரசுப்பள்ளிகளுடன் இணைப்பதைக்கண்டித்தும் பெயர் மாற்றத்தைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பபட்டன.

You must be logged in to post a comment.