கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் அரசு ஆணை 40ஐ ரத்து செய்யப்பட வேண்டும்,கள்ளர் பள்ளி ஆதி திராவிடர் பள்ளி பெயர் நீக்கம் கண்டித்தும் அதற்கு அறிக்கை பரிந்துரை செய்த முன்னாள் நீதிபதி சந்துரு அவர்களுடைய அறிக்கையின் நகல் எரிப்பு போராட்டம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்றது.இந்தப்போராட்டத்தில் அனைத்து பார்வர்டு பிளாக் கட்சிகள் மற்றும் கள்ளர் இன சமுக நல கூட்டமைப்புகள் மற்றும் கள்ளர் சீரமைப்பு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழு, மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக உசிலம்பட்டி தேனி ரோட்டிலுள்ள முருகன் கோவில் முன்பு ஊர்வலமாக கிளம்பிய போராட்டக்குழுவினர் தேவர்சிலை அருகில் வந்து நீதிபதி சந்துருவின் அறிக்கை நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் வழக்கறிஞர் சங்கிலி முருகன் ஜி திருமாறன்ஜி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பபட்டன.

You must be logged in to post a comment.