கீழக்கரையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்..

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் சார்பில் வட்டத்தலைவர் காளிதாஸ் தலைமையில் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் Digital Crop Survey பணி குறித்தும், அது சம்பந்தமாக கிராம நிருவாக அலுவலர்களுக்கு கொடுக்கப்படும் முறையற்ற அழுத்தம் குறித்தும் , Digital Crop Survey பணியை புதிதாக பணியில் சேர்ந்து தகுதிகாண் பருவம் நிறைவு பெறாத மற்றும் விளம்புகை செய்யப்படாத கிராம நிருவாக அலுவலர்களை வைத்து தொடங்கவும், மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டும் பாணியிலும் வெளியிடப்பட்டிருக்கும் செய்தி குறித்து இக் கூட்டமைப்பு மிகக் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கண்டனத்தை தெரிவித்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

syed abdulla

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!