திண்டுக்கல் அருகே சின்னபள்ளபட்டி செல்லும் பாதையை தனிநபர் ஆக்கிரமித்ததால் பொதுமக்கள் சாலைமறியல்..வீடியோ..

திண்டுக்கல் அருகே உள்ள சின்னபள்ளபட்டி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊருக்கு திண்டுக்கல் செல்லும் பிரதான சாலையில் பிரிந்து செல்லும் இனைப்பு சாலையை சுமார் 60 ஆண்டுகளாக அந்த ஊர் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த சாலைக்கு திண்டுக்கல் சட்ட மன்ற உறுப்பினர்கள் மேப்பாட்டு நிதியில் இருந்து பராமரிப்பு வேலைகள் செய்யப்பட்டு தார்சாலை அமைக்கப் பட்டுள்ளது.

தற்போது அப்பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் இணைப்பு தருவதற்காக பள்ளம் தோண்டி வரும் நிலையில் சாலையின் முன்பகுதியில் இரும்பு குடோன் வைத்து நடத்தி வரும் தனிநபர் பாதை தனக்கு சொந்தமானது என்று வேலையை தடுத்து நிறுத்தி போர்டு வைத்துள்ளதால். சின்னபள்ளபட்டியை சேர்ந்த பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் திண்டுக்கல் -வத்தலக்குண்டு சாலையில் சுமார் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதை அறிந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் தாலுகா காவல்துறையினரும் துறைசார்ந்த அதிகாரிகளும் போர்டை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்ததோடு பேச்சு வார்த்தையின் மூலம் இருதரப்பினருக்கும் இடையே சமரசம் செய்தனர்.

மாவட்ட செய்தியாளர்:- பக்ருதீன்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!