இராமநாதபுரம், நவ.7 – இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் அரசு உப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத் தொழிலாளிகளுக்கு போக்குவரத்து கழகம் மின்சார வாரிய ஊழியர்களுக்கு வழங்குவது போல் 20% போனஸ் வழங்க வேண்டும். அதிகாரிகளின் சூழ்ச்சியால், உப்பு நிறுவன தொழிலாளர்களுக்கு 10% போனஸ் வழங்க முடியும் என தெரிவித்தனர். உப்பு நிறுவனம் நிர்வாகம் நிர்ணயித்த உப்பு உற்பத்தியை விட கூடுதலாக உற்பத்தி செய்து லாபத்தில் உப்பு நிறுவன நிர்வாகத்தை இயங்க வைத்த தொழிலாளிகளுக்கு 10 சதம் வழங்கப்படும் என்ற தகவலால் கொந்தளிப்பு ஏற்பட்டது .சிஐடியு தொழிற்சங்க செயற்குழு கூட்ட முடிவு படி 20% போனஸ் வழங்கும்பரை காலவரையற்ற வேலை நிறுத்தமும், ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. இன்று (7.11.2023) வேலை நிறுத்தம், கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி நிறுவனத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடத்துவது 8.11.2023 அன்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்துவது 9.11.2023 அன்று வாலிநோக்கம் விலக்கு ரோட்டில் சாலை மறியல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.


You must be logged in to post a comment.