இராமநாதபுரம், நவ.2-
பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல் அராஜகத்தை கண்டித்து, அப்பாவி மக்களுக்கு எதிரான போரை நிறுத்த கோரி கீழக்கரை பொதுமக்கள் – அனைத்து ஜமாத் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஜனநாயக வழி ஆர்ப்பாட்டம் நடந்தது. எஸ்.எஸ்.ஹபீப் நெய்னா கிராத் ஓதினார். எஸ்.பாசித் இலியாஸ் வரவேற்றார்.
எம்.முகமது பரூஸ், எஸ்.சுல்தான் சிக்கந்தர், எம்.எஸ்.ஹமீது பைசல், கே.எம் எப்.பாரூக் ராஜா ஆகியோர் கண்டன கோஷமிட்டனர். போர் விதி முறைகளை மீறி பாலஸ்தீன குழந்தைகள, பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களை கொன்று குவிப்பதை கண்டித்தும், பாலஸ்தீன மக்களுக்காக ஐநா சபையில் இந்திய அரசு குரல் கொடுக்க வேண்டும் எனவும், பாலஸ்தீன மக்களுக்கு இந்திய அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என வலியுறுத்தி ஏராளமான குழந்தைகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். என்.பி.பிரபாகரன் பங்கு தந்தை ரெமி ஜியஸ், ஜஹாங்கீர் அரூஸி ஆலிம் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார். கீழக்கரை கதீப் புதுப்பள்ளிவாசல் எம்.கே.ஐ.மன்சூர் ஆலிம் நூரி சிறப்புரை ஆற்றினார். ஹெச். பவுசூல் அமீன் நன்றி கூறினார்.
எம்.எஸ்.முஹமது ஜலீல் தொகுத்து வழங்கினார். இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.


You must be logged in to post a comment.