மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போத்தம்பட்டி காலனியைச் சேர்ந்தவர்கள் தனுஷ் மற்றும் மலை ராஜா ஆகிய இருவரும் ஒன்றாக இணைந்து ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் ஆட்டுப் பட்டியில் 100க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு சென்ற பின் வழக்கம் போல் இன்று தண்னீர் பருகவிட்டு பட்டியில் கட்டி வைத்துள்ளனர்.சிறிது நேரத்தில் 30க்கும் மேற்பட்ட ஆடுகள் வாயில் நுரை தள்ளியபபடி மர்மமான முறையில் இறந்துள்ளது.மற்றும் சில ஆடுகள் உயிருக்குப் போராடியுள்ளன. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் கால்நடைத்துறையினர் ஆய்வு செய்ததில் ஆடுகள் குடிக்கும் தண்ணீரில் யூரியா உரம் கலந்திருப்பது தெரிய வந்தது.இது தொடர்பாக போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.இந்நிலையில் இதே ஊரைச் சேர்ந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த கருப்பத்தேவர் மகன் அஜித்குமார் முன்விரோதம் காரணமாக ஆடு குடிக்கும் தண்ணீரில் யூரியா கலந்திருக்கலாம் என தனுஷ் உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.ஆனால் போலிசார் விசாரணை செய்து வந்த நிலையில் குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் கோட்டாச்சியர் போத்தம்பட்டி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த போலிசார் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


You must be logged in to post a comment.