டிடோஜாக் பயிற்சி மையத்தில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர் காத்திருப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட்டனர்.இந்நிலையில் இடைநிலை ஆசிரியர் சங்கத்தினரை போலிசார் இன்று கைது செய்துள்ளனர்.இது அரசு ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் பொற்செல்வன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பள்ளி மைதானத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலை செய்யாவிட்டால்; தமிழக முழுவதும் மௌன புரட்சி வெடிக்கும் எனவும் திமுக அரசு அடுத்த ஆட்சி நடத்த முடியாது எனவும் கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


You must be logged in to post a comment.