மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது வில்லாணி கிராமம்.இக்கிராமத்தில் சுமார் 1000க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இந்நிலையில் இக்கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் சரிவர வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது.இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் எவ்வித பதிலும் இல்லை.இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வில்லாணி ஊர் மந்தை முன் இந்தியக்குடிமகன்களுக்கான ஆவணங்களான ஆதார் அட்டை வாக்காளர் அடையாள அட்டை ரேசன் கார்டு ஆககியவற்றை அதிகாரிகளிடம் திரும்ப ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்கள் எழுப்பினர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









