இராமநாதபுரம், செப்.5- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றிய பாஜக இளைஞரணி துணை தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு போலீசார் கடும் நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த தமிழ் செல்வன் பார்த்திபனூர் போலீஸ் ஸ்டேஷனில் தீயிட்டு தற்கொலை செய்ய முயன்றார். துரிதமாக மீட்கப்பட்ட அவருக்கு பரமக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. இதன் பின்னர் அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தமிழ்செல்வன் தற்கொலை முயற்சிக்கு காரணமான போலீஸ் இன்ஸ்பெக்டரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி பாஜகவின் பார்த்திபனூர் – பரமக்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் தரணி முருகேசன், மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா, மாநில செயற்குழு உறுப்பினர் ஜிபிஎஸ் நாகேந்திரன், நாகராஜன், இளைஞரணி மாவட்ட தலைவர் மோடி முனீஸ், மண்டபம் கிழக்கு மண்டல தலைவர் கதிரவன் உட்பட 200க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









