ராமநாதபுரம், கீழக்கரை, மண்டபம் பகுதிகளில் தினமலர் நாளிதழ் எரிப்பு: திமுக போராட்டம்…

இராமநாதபுரம், ஆக.31- தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கொச்சைப்படுத்தி செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழை திமுகவினர் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை, நடுத்தர வர்க்கங்களைச் சேர்ந்த குழந்தைகளின் பெற்றோரின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு காலை உணவு திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 2022 செப்.15ஆம் தேதி மதுரையில் துவக்கி வைத்தார். இத்திட்டத்தில் 17 லட்சம் குழந்தைகள் மேலும் பயனடையும் விதமாக 31 ஆயிரம் பள்ளிகளில் ஆக.25 ல் விரிவாக்கம் செய்து, நாகை மாவட்டம் திருக்குவளை துவக்கப்பள்ளியில் துவங்கி வைத்தார். இந்நிலையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மிகவும் கொச்சைப்படுத்தி சேலம், ஈரோடு பதிப்பு தினமலர் நாளிதழில்  செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தரம் தாழ்ந்த இச்செய்தி தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சம்பத் ராஜா தலைமையில் அரண்மனை பகுதியில் தினமலர் நாளிதழ் எரிப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட துணை அமைப்பாளர்கள் ரமேஷ் கண்ணா, கோபிநாத், தௌபீக் ரஹ்மான் உள்பட பலர் பங்கேற்றனர்.

கீழக்கரையில் திமுக அயலக அணி சார்பில் மாவட்ட தலைவர் முஹமது ஹனிபா தலைமையில் தினமலர் நாளிதழை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர். நகர் இளைஞர் அணி அமைப்பாளர் சுபியான், ரத்த உறவுகள் ஆதில், காதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  மண்டபம் பேரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பேரூர் திமுக செயலர் அப்துல் ரஹ்மான் மரைக்காயர் தலைமையில் தினமலர் நாளிதழை தீயிட்டு கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!