மதுரை மாநகராட்சி 79வது வார்டு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்து திமுக கவுன்சிலர் தலைமையில் போராட்டம்..

மதுரை:

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டு பகுதிகளிலும் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு தெருக்களில் கழிவுநீர் குளம் போல தேங்கும் அவலம் தொடர்ந்து டவருகிறது. இதே போன்று குடிநீரில் கழிவுநீர் கலந்துவருவதால் அதனை பொதுமக்கள் அருந்தும் அவலத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 79ஆவது வார்டில் உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை நிரம்பி தெருக்களில் ஓடுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு குடிநீரிலும் கழிவு நீர் கலந்து வருவதாக தொடர்ச்சியாக அந்த வார்டு உறுப்பினரான திமுக பெண் மாமன்ற உறுப்பினர் லக்சிகா ஸ்ரீ மாமன்ற உறுப்பினர் கூட்டத்தில் பல முறை பேசியும், மேயர் அலுவலகத்திலும் ஆணையாளரிடமும் பலமுறை புகார் அளித்துள்ளார்.

ஆனால் மாநகராட்சி நிர்வாகமும் மேயரும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மண்டல கூட்டத்திலும் இதுகுறித்து எடுத்துரைத்துள்ளார் 

ஆனாலும் மாநகராட்சி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து திமுக பெண் மாமன்ற உறுப்பினர் லக்சிகா ஸ்ரீ தலைமையில் அந்த பகுதி பொதுமக்கள் ஜெய்ஹிந்த்புரம் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடும் வெயிலில் அமர்ந்து  திமுக பெண் கவுன்சிலர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்ற நிலையலும்  மாநகராட்சி அதிகாரிகள் நேரில் பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பெண் கவுன்சிலர் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தை கூட மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாத அவலம் மதுரை மாநகராட்சியில் நிலவுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடிப்படை வசதி கூறி பொதுமக்கள் போராட்டத்தை கூட மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே 1 மணி்நேர போராட்டத்திற்கு பின்பு வந்த அதிகாரிகளிடம் வந்தபோது மினரல் வாட்டரை குடிங்கள் என அதிகாரிகளிடம் கொடுத்த போது வாங்க மறுத்ததால் இது சாக்கட கலந்த நாங்கள் குடிக்கும் குடிநீர் இல்லை நல்ல மினரல் வாட்டர் தான் என்றவுடன் வாங்கி குடித்த சம்பவமும் நடைபெற்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!