உசிலம்பட்டியில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில்; ஈடுபட்டு வரும் விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஊர்வலமாக வந்து உசிலம்பட்டி கோட்டாச்சியரிடம் மனு அளித்தனர்.
விவசாயிகளின் விளை பொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்ய கோரியும், கரும்பு மற்றும் நெல்லுக்கு உரிய விலை வழங்க கோரியும், விவசாய நிலங்களுக்குள் வரும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும், முல்லை பெரியாற்றில் 152 அடி நீர் தேக்கி விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 16 மாவட்டங்களில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்., தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.,
34 நாட்களாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திருமங்கலம் விலக்கு பகுதியில் விவசாய சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தி.விலக்கிலிருந்து டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்து உசிலம்பட்டி பேரையூர் ரோட்டிலுள்ள கோட்டாச்சியர் அலுவலகத்தில் கோட்டாச்சியர் ரவிச்சந்திரனிடம் மனு அளித்தனர்.முன்னதாக உசிலம்பட்டி தேவர்சிலை முன் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


You must be logged in to post a comment.