ஆதித்தமிழர் கட்சி சார்பில் ஒன்றிய அரசு மற்றும் தினமலர் பத்திரிக்கை கண்டித்து கீழக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டம்….

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதியபேருந்து நிலையம் எதிரில் ஒன்றிய அரசுக்கு எதிராக பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்வை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் கர்நாடக அரசு காவேரி அணையின் குறுக்கே மேகதாது அணைகட்ட அனுமதி வழங்க கூடாது எனவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் தமிழகத்தை துண்டாட நினைக்கும் தினமலர் பத்திரிக்கை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தின்போது தினமலர் நாளிதழை எரித்தும் ஆதித்தமிழர் கட்சி சார்பில் திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் உதயக்குமார் தலைமையயிலும் மாவட்ட செயலாளர் ரணியன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், பெரியார் பேரைவை தலைவர் நாகேஸ்வரன், வீரகுல தமிழர்படை ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன்,சமூக ஆர்வலர் தமிழ்வானன், விடுதலை சிறுத்தை கட்சி நகர் செயலாளர் பாசித், எஸ்.டி.பி.ஐ நகர் செயலாளர் ஹமீது பைசல், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நகர் செயலாளர் நதீர்,சிபிஐ எம்.எல் ரெட் ஸ்டார் யோகேஸ்வரன், மற்றும் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். கீழக்கரை காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்

[email protected]

Recent News

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!