வழுதூர் ஊரணியில் எரிவாயு கசிவு… ஊர் மக்கள் சாலை மறியல்..

இராமநாதபுரம் அருகே வழுதூர் – பெரியபட்டினம் விலக்கு சாலையில் உள்ள ஓஎன்ஜிசி காஸ் உற்பத்தி செய்து பூமிக்கு அடியில் பதித்த குழாய்கள் மூலம் அனுப்பி வருகிறது. இந்நிலையில் வழுதூர் ஊருணியின் அடியில் செல்லும் குழாய் வழியாக காஸ் கசிந்து தண்ணீரில் கொப்பளங்கள் ஏற்படுவதை அவ்வழியாக சென்ற மக்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஊருணி நடுவே காஸ் குழாய் உடைந்து கொப்பளங்கள் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரியபட்டினம் விலக்கு சாலையில் மறியல் செய்தனர்.இதனால் இப்பகுதி மக்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படலாம் என கூறி மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.

கிராமத் தலைவர் சவுந்தரபாண்டியன், பி.டி.ராஜா, ராமமூர்த்தி உள்பட அக்கிராம இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். இராமநாதபுரம் டி.எ.ஸ்.பி., நடராஜன் சம்பவ இடம் சென்று ஒ என் ஜி சி அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை விரைவில் எடுப்பதாக உறுதியின் பேரில் கலைந்து சென்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!