உடுமலை சங்கர் படுகொலை வழக்கை முறையாக நடத்தாத அதிமுக அரசை கண்டித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..
சாதி மாறி திருமணம் செய்த உடுமலை சங்கர் என்பவரை ஆணவப்படுகொலை செய்த வழக்கில் சங்கர் மணைவியின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் உடுமலை சங்கர் கொலை வழக்கை முறையாக அதிமுக அரசு நடத்தவில்லை என பல்வேறு கட்சி தலைவர்கள் அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தனர். மேலும் உடுமலை சங்கர் கொலை வழக்கை உடனடியாக மேல் முறையீடு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதிய தமிழகம் கட்சியினர் தீடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை உடுமலை சங்கர் கொலை வழக்கை முறையாக நடத்தாதஅதிமுக அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பபட்டன.
மேலும் ஆணவப்படுகொலைகளுக்கு துணை போகதே என்றும் உடுமலை சங்கர் கொலை வழக்கை விரைவாக மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிமுக அரசை வலியுறுத்தினார்கள். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கு மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












