மத்திய மாநில அரசை கண்டித்து கீழக்கரையில் கம்யூனிஸ்ட் தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்…….

மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் கொரோனா கால நிவாரண தொகையாக மாதம் ரூபாய் 7500 வழங்க் கோரியும் CITU சங்கங்களின் சார்பில் கீழக்கரை இந்து பஜாரிலும் பழைய மீன் கடை மார்க்கெட்டிலும் ஆர்ப்பாட்டம் காலை 10 மணிக்கு சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறு வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மகாலிங்கம், மாரியப்பன், கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வரகுண சேகரன், கருப்புச்சாமி, விக்டர், ஆட்டோத தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் செல்வவிநாயகம். பாரம்பரிய நாட்டுப் படகு மீனவர் சங்கத்தின் செயலாளர் முகைதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்..

கீழை நியூஸ் SKV சுஐபு

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!