ஆட்டோகளை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூபாய் 15 ஆயிரம் வழங்க வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டம்..

விருதுநகர் மாவட்டத்தில் ஆட்டோகளை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூபாய் 15 ஆயிரம் வழங்க வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஆட்டோக்கள் இயங்கவில்லை ஆட்டோ ஓட்டும் தொழிலை நம்பி 5000 மேற்பட்ட குடும்பங்கள் உள்ள நிலையில் 55 நாட்களாக ஆட்டோ இயங்காததால் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் எனவே விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 5,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 15000 ஆயிரம் வழங்க வேண்டும் ஆட்டோக்கள் இயங்க தளர்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 100 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து தடையை மீறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சூலக்கரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!