அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கொரொனா சிகிச்சை பிரிவாக மாற்றுவதாக கிடைத்த தகவலால் பொதுமக்கள் எதிர்ப்பு..

ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டையில் 20 படுக்கைகள் கொண்ட வசதியுடன் கர்ப்பினி பெண்களுக்கு முக்கியதத்துவம் கொடுக்கும் விதமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. தற்போது கடந்த இரண்டு தினங்களாக புதர்மண்டிய நிலையில் கிடந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை சுத்தம் செய்யும் பனி நடைபெற்று வருகிறது. திடீரென சுத்தம் செய்யும் பனி நடைபெற்றதால் பொதுமக்கள் மத்தியில் பிரசவ சிகிச்சையை தவிர்த்து கொரொனா தொற்று உள்ள நோயாளிகளுக்கு மருத்துமனையில் சிகிச்சை அளிப்பதற்கான பனிகள் நடைபெறுவதாகவும் வடமாநிலத்தில் இருந்து கொரொனா நோய்தொற்று உள்ளவர்களை இங்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுமதிக்க போவதாகவும் மக்கள் மத்தியில் வதந்தி பரவியது.

இதனால்ச ச த்தையன் கோட்டையை சேர்ந்த சுமார் 200 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துமனை முன்பு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக திரண்டனர். தகவலறிந்து விரைந்து வந்த ஆத்தூர் வட்டாச்சியர் அரவிந்த் மற்றும் செம்பட்டி காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் அனைவரையும் அழைத்து பேசி சமரசம் செய்ததோடு வட்டாச்சியர் அரவிந்த் பொதுமக்கள் மத்தியில் கொரொனா சிகிச்சை பிரிவாக மாற்றுவதற்கான வாய்ப்பு இல்லை என கூறியதோடு பொதுமக்களிடம் எதிர்ப்பு கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார் அதன்பின் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!