மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரி கிராமத்தில் அனைத்து சமூக மக்களும் இணைந்து நடத்திய மாபெரும் தர்ணா போராட்டம்..

இந்தியா முழுவதும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் தமிழகத்தில் அனைத்து பகுதகளிலும் தர்ணாவும், போராட்டங்களும் வீரியமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று (01/03/2020) மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரி கிராமத்தில் அனைத்து சமூக மக்களும் இணைந்து மாபெரும் தர்ணா போராட்டத்தை நடத்தினர். இத்தர்ணா போராட்டத்தை விளாச்சேரி முஸ்லிம் ஜமாத்துடன் இணைந்து அனைத்து சமுதாய மக்களும் பங்கெடுத்தனர். இந்த போராட்டத்தில் 3000த்திற்கும் மேற்பட்ட கிராமத்தினர் பெரும் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது.

இப்போராட்டத்தில் முக்கிய அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.  இந்த கண்டன போராட்டம் மூலம் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் NPR, NRC,CAA போன்ற சட்டங்களால் இந்திய முஸ்லிம்கள் மட்டுமல்ல பல லட்ச இந்து சமுதாய மக்களும் சொந்த நாட்டில் அகதிகளாக்கப்படுவார்கள் என்பதை உணர்த்தியது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!