இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே முகிழ்தகம் முத்தமிழ் நகரைச் சேர்ந்த மீன் வியாபாரி கருப்பையா. இவரது மகன் அஜித்குமார்,23. இவர் தொண்டியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் டிரைவராக வேலை செய்து வந்தார். தினமும் இவர் ஆட்டோ மூலம் கடைகளுக்கு தண்ணீர் கேன் விநியோகித்து வந்தார். நேற்று முன் தினம் இரவு 8:30 மணியளவில் பங்க் உரிமையாளரிடம் ரூ.3ஆயிரம் வாங்கிக்கொண்டு கோயிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
இந்நிலையில் நேற்று (14/05/2019) காலை நம்புதாளை மஞ்சள்கரிச்சான் ஊருணிக்குள் தலை, கழுத்து பகுதியில் பலத்த காயங்களுடன் அரை குறை ஆடைகளுடன் அஜித்குமார் கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்தார். இது குறித்து நம்புதாளை வி.ஏ.ஓ., சதீஷ் கண்ணன், தொண்டி போலீசில் புகார் அளித்தார். திருவாடானை வட்டாட்சியர் சேகர், டிஎஸ்பி புகழேந்தி கணேஷ், தொண்டி எஸ்.ஐ., காமாட்சிநாதன் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர்.
அஜித்குமாரின் புறங்கைகளை மர்ம நபர்கள் கட்டி வைத்ததற்கான அடையாளம் இருந்தது. கொடூரமான முறையில் தலை, கழுத்தில் வெட்டி கொலை செய்து, அவரது உடலை சிறிது தூரம் இழுத்து சென்று விட்டுச் சென்றது தெரிந்தது. அஜித்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. அஜித்குமார் தந்தை கருப்பையா புகாரில் தொண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம், கொலையாளிகள் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் அஜித்குமார் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. திருவாடானை டிஎஸ்பி சமரசத்தை ஏற்காமல் போராட்டம் தொடர்ந்தது. இவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சில கட்சிகள் களமிறங்கினர். விசிக ., தொழிற் சங்க மாவட்ட செயலாளர் அற்புதக்குமார், மாநில துணை செயலாளர் கிட்டு, மாவட்ட துணை செயலாளர் தேனமுதன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் செல்லக்கண்ணு, கந்தசாமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி தட்சிணாமூர்த்தி, அகில இந்திய மாதர் சங்க மாவட்ட நிர்வாகி கண்ணகி, விசிக., ஊடகத் தொடர்பாளர் சத்யராஜ் உள்ளிட்டோரிடம் மீண்டும் தொடர்ந்த சமரச பேச்சில் உடன்பாடு ஏற்பட்டது.
கொலையாளிகளை விரைவில் கைது செய்யப்படுவர் என போலீசார் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து அஜித்குமார் உடலை நாளை (16.7.19) காலை பெற்றுக் கொள்வதாக கூறி கலைந்து சென்றனர்.
தற்போதைய தகவல்:-திருட்டில் தொடர்புடைய சின்ன சேலம் வெங்கடேசன் 22, அழகன்குளம் மகேந்திரன் 35 , முசிறி லோகநாதன் 24 ஆகியோரை திருப்புல்லாணி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தலா 2 லேப்டாப், மொபைல் போன், ஒரு கேமரா கைபற்றினர். நீதிமன்ற உத்தரவுப்படி இராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print















