நிலக்கோட்டை அருகே ஜாதி தலைவர்கள் படம் அவமதிப்பு பஸ் மறியல் போலீஸ் குவிப்பு..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ஓட்டுப்பட்டியில் ஒரு சமுதாயத்துக்கு சொந்தமான பெயர் பலகை மற்றும் நற்பணி மன்ற தலைவர்கள் சிலையுடன் இருந்தத பெயர்பலகையை நேற்று இரவு (17/06/2019) மர்ம நபர்கள் சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

இன்று (18/06/2019) காலை அதை பார்த்த அப்பகுதி மக்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். பெயர் பலகை மீது சாணியை வைத்து அசிங்கப்படுத்திய சமூக விரோதிகளை மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் இதேபோன்று சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கவும் உறுதி தர வேண்டும் என வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு நிலக்கோட்டை தாசில்தார் நவநீதகிருஷ்ணன் நிலக்கோட்டை டிஎஸ்பி பாலகுமாரன்,  ஆய்வாளர் சங்கரேஸ்வரன்,  செம்பட்டி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கௌதம்,  சின்னன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியல் நடத்திய பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது.  இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!