இராமநாதபுரம் அருகே பாப்பாக்குடி, கவரங்குளம் கிராமங்கள் உள்ளன. இவ்விரு கிராமங்களை சேர்ந்த சில வாலிபர்களுக்கு இடையே கடந்த இரண்டு நாட்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இது நேற்று முன் தினம் இரவு மோதலாக மாறியது. இதனை தொடர்ந்து ஒரு தரப்பினரை மற்றொரு தரப்பினர் நேற்று முன் தினம் இரவு கடுமையாக தாக்கினர்.
இதில் பாப்பாகுடியைச் சேர்ந்த 6 பேர் காயம் அடைந்தனர். வீடுகள் சூறையாடப்பட்டன. காயமடைந்த பாப்பாகுடி கிராமத்தைச் சேர்ந்த 6 பேர், இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் போலீசார் பாரபட்சமாக நடந்து கொள்வதாக கூறி பாப்பாகுடி கிராமத்தினர், ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால், ராமநாதபுரம் – ராமேஸ்வரம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியவில் ஈடுபட்டவர்களிடம், காவல் துணை கண்காணிப்பாளர் நடராஜன் தலைமையில் போலீசார் சமரசம் பேசினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து மறியல் விலக்கி கொள்ளப்பட்டது.
.





You must be logged in to post a comment.