திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே நல்லம் பிச்சம்பட்டியில் அமைந்துள்ள தனியார் வெள்ளரி கம்பெனியின் கழிவு நீர் வெளியேறி அதனால் பொது மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் என்பதை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் அந்த வெள்ளரி கம்பெனியின் முன் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அது சமயம் செய்தி சேகரித்துக்கொண்டிருந் நத்தம் தந்தி டிவி செய்தியாளர் ஜோதி லாசர் மீது. வெள்ளரி கம்பெனியின் குண்டர்கள் எதற்காக புகைப்படம் வீடியோ எடுக்கிறாய் என கேட்டு கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் “ஜோதி லாசர்” கைகளில் கடுமையான பாதிப்பு ஏற்ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கொலை வெறி தாக்குதல் நடத்திய வெள்ளரி கம்பெனி குண்டர்கள் மீது பாரபட்சம் இன்றி காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் அந்த வெள்ளரி கம்பனியால் பாதிக்கப்படும் மக்களை பொது நலன் கருதி அந்த கம்பெனியின் செயல் பாடுகள் குறித்து அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் (WJUT – WORKING JOURNALIST UNION OF TAMILNADU) சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களிடம் முறைப்படி புகார் அளிக்கவும். அந்த வெள்ளரி கம்பெனியின் முன் பத்திரிகையாளர் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தவும். “தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்” திண்டுக்கல் மாவட்டம் சார்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்ட சம்பந்தமான தேதி, இடம் மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









