கீழக்கரை தாலூகா அலுவலகத்தில் விவசாய அணியினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து குடி அமரும் போராட்டம் இன்று (28.08.18 ) நடைபெற்றது.
இப்போராட்டம் இரு அம்ச கோரிக்கையுடன், வறட்சி நிவாரணம் வழங்க கோரியும், பயிர் இழப்பீடு வழங்க கோரியும் போராட்டம் நடைபெற்றது. கீழக்கரை தாலூகாவிற்கு உட்பட்ட கிராமத்தினர் சுமார் 200 க்கும் மேலானோர் இதில் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தில் அடுப்பு, பாத்திரம், கையில் ஏந்தியபடி, ஊர்வலமாய் தாலூகாவை முற்றுகையிட வந்ததை தொடர்ந்து அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து கடற்கரை அருகே உள்ள கண்ணாடி வாப்பா அரங்கத்தில் தங்க வைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அதே போல் இராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து 2016, 2017 ஆண்டுகளில் விடுபட்ட பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகையை உடனடியாக வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இராமநாதபுரம் தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க பொருளாளர் பெருமாள் தலைமை வகித்தார். தாலுகா செயலர் கல்யாணசுந்தரம், தலைவர் ராமமூர்த்தி, தேர்போகி கத்தார் முன்னிலை வகித்தனர்.
தகவல் : மக்கள் சேவையில் மக்கள் டீம்..
முருகன்- கீழை நியூஸ், இராமநாதபுரம.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print













