கீழக்கரையில் காவல்துறை முன்னாள் D S P… கிருஷ்ணகிரி மாவட்ட ADSP யாக பதவி உயர்வு…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சரகத்தில் காவல்துறை துணைக்கண்கானிப்பளராக சுமார் இரண்டரை வருடம் சிறப்பாக பணியாற்றிய  K.மகேஸ்வரி இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னை வேப்பேரி காவல்துறை துணை ஆணையராக A C P யாக தமிழக அரசு பணியமர்தியது.

தற்போது தழிழக அரசால் புதிதாக தொடங்கிய கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராக ADSP யாக பணி உயர்வு செய்து இருக்கின்றது. இவர் காவல்துறையில் நேர்மையோடும், துடிப்போடும் செயல் புரிந்து வருபவர்.

கீழக்கரையில் துணைக்கண்காணிப்பாளராக பணிபுரிந்த போது அனைத்து தரப்பு மக்களோடும் அன்புடனும், நட்புடனும் பழகி வந்தவர். இவர் இங்கு பணியாற்றிய போது குற்றங்கள் நடை பெறாமல் கண்ணும் கருத்துமாக இருந்ததோடு பிரச்சினைகள் ஏற்பட்டால் நேரில் சென்று கண்காணித்து வந்து சட்ட ஒழுங்கை சீராக்கியவர் என்பது குறிப்பிடதக்கது.

இவரின் சேவை சிறப்புற கீழை நியூஸ் – சத்தியபாதை மாத இதழ் சார்பாக வாழ்த்துக்கின்றோம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!