கீழக்கரை தாலுகாவிற்கு தாசில்தாராக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ள தமீம் ராசாவுக்கு மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக வாழ்த்து

கீழக்கரை தாலுகாவிற்கு சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தின் புதிய தாசில்தாராக தமீம் ராசா பதவி உயர்வு வழங்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவினை மாவட்ட ஆட்சியர் அனுப்பியுள்ளார். அதில் பணி நியமனம் பெற்றவர்கள் புதிய பணியிடத்தில் உடனடியாக பதவியேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இது வரை துணை வட்டாட்சியராக கீழக்கரை தாலுகாவில் வட்ட வழங்கல் அதிகாரியாக சிறப்பாக பணியாற்றி வந்த தமீம் ராசா இன்று 06.03.17 முறைப்படி அலுவலகத்திற்கு வந்து பொறுப்பேற்று கொண்டார். இந்நிலையில் தமீம் ராசாவுக்கு, கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இந்நிகழ்வில் மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் செயலாளர் முகைதீன் இப்ராகீம் மற்றும் பொருளாளர் முஹம்மது சாலிஹ் ஹுசைன் உடனிருந்தனர்.

இவர் கடந்த மாதம் நடைபெற்ற இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் புதிய தாசில்தாராக பதிவு உயர்வு பெற்று பொறுப்பேற்றிருக்கும் தமீம் ராசாவின் பணிகள் மென்மேலும் சிறக்க கீழை நியூஸ் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!