ராமநாதபுரத்தில் வருவாய் துறை அலுவலர்கள் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் ! மாவட்ட ஆட்சியர் உத்தரவு !!

இராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய்த்துறை நிர்வாக நலன் கருதி வட்டாட்சியர் நிலையில் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல்கள் வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டு உள்ளார். இந்த நிலையில் திருவாடானை வட்டாட்சியர் K. கார்த்திகேயன் ஆர்.எஸ்.மங்கலம் நிலம் எடுப்பு தனி வட்டாட்சியராகவும் , கமுதி வட்டாட்சியர் V. சேதுராமன் பரமக்குடி சமூகநல பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியராகவும் , கடலாடி வட்டாட்சியர் N. ரெங்கராஜு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியராகவும் ,கீழக்கரை வட்டாட்சியர் S.பழனிக்குமார் இராமநாதபுரம் சமூகநல பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியராகவும் , ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் S. பாலகிருஷ்ணன் கீழக்கரை சமூகநல பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியராகவும் , இராமேஸ்வரம் வட்டாட்சியர் P.வரதராஜ் ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியராகவும் , ஆர்.எஸ்.மங்கலம் நிலம் எடுப்பு தனிவட்டாட்சியர் K. செல்லப்பா இராமேஸ்வரம் வட்டாட்சியராகவும் , இராமநாதபுரம் துணை ஆய்வுக்குழு அலுவலர் M.A. ஜமால்முகம்மது கீழக்கரை வட்டாட்சியராகவும் , பரமக்குடி ஆதிதிராவிட நலத்திட்டம் தனி வட்டாட்சியர் S. காதர்முகைதீன் , கமுதிவட்டாட்சியராகவும் , இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர்G.R. அமர்நாத் திருவாடானை வட்டாட்சியராகவும் , பரமக்குடி சமூகநல பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியர் K.முருகேஷ் கடலாடி வட்டாட்சியராகவும் ,கீழக்கரை சமூகநல பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியர் A. சேகுஜலாலுதீன் கீழக்கரை நிலம் எடுப்பு தனி வட்டாட்சியராகவும் , இராமநாதபுரம்சமூகநல பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியர் N. சண்முகசுந்தர் பரமக்குடி ஆதிதிராவிட நலத்திட்டம் தனி வட்டாட்சியராகவும் , ஆர்.எஸ்.மங்கலம் சமூகநல பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியர் K. தமிழ்ச்செல்வி இராமநாதபுரம் துணை ஆய்வுக்குழு அலுவலராகவும் , கீழக்கரை நிலம் எடுப்பு தனி வட்டாட்சியர் S. மீனலோஷனி ஆர்.எஸ்.மங்கலம் சமூகநல பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சியராகவும் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!