இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் சார்பாக மத்ரஸா மாணவர்களுக்கான ப்ரொஜெக்டர் வகுப்பு (projector class) இன்று இரவு 8:30 மணியளவில் சின்னக் கடை தெருவில் அமைந்துள்ள அல் மஸ்ஜிதுல் ரவ்லத்துல் ஆபிதாத் மத்ரஸாவில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் தலைவர் ஆலிம். சட்டப் போராளி தவ்ஹீத் ஜமாலி தலைமை தாங்கினார். இதில் அல் மத்ரஸத்துர் ராழியா, அல் மத்ரஸத்துல் அஸ்ஹரிய்யா, அல் மத்ரஸத்துல் ஃபிர்தௌஸ் ஆகிய மத்ராஸாகளில் பயிலும் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதில் சிறுவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் பற்றிய பட காட்சிகள் மூலம் விளக்கப்பட்டது.
இந்த வகுப்பை காயல்பட்டிணம் தாஃவா சென்டரை சேர்ந்த சகோதரர் அன்சாரி அவர்கள் சிறப்பாக நடத்தினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை இஸ்லாமிய கல்விச் சங்கத்தின் பொருளாளர் சட்டப் போராளி சல்மான் கான் மற்றும் உறுப்பினர் முஹம்மது சுஹைல் செய்திருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












இன்றைய தலைமுறையினருக்கு அவசியம் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அவசியம்.அடிக்கடி நடத்தி எதிர்கால நல்ல சந்ததியினரை உருவாக்குங்கள்.