இராமநாதபுரத்தில் 23/11/2018 அன்று WILL MEDAL OF WORLD RECORDS AND RESEARCH FOUNDATION (WMWRRF) நடத்திய “உயர்வோம் உயரச்செய்வோம்” கலை நிகழ்வானது முகம்மது சதக் தஸ்தஹீர் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சுமார் 130க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியரும் பிற நிறுவனங்களில் பணியாற்றுபவர்களும் கலந்துகொண்டு அவர்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர் .காலையில் சரியாக 11.30 மணி அளவில் இந்த கலை நிகழ்வானது தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. மாலையில் சரியாக 4 மணி அளவில் சான்றிதழ்களும் பதக்கங்களும் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கு முகமது சதக் தஸ்தஹீர் கல்வியல் கல்லூரியின் முதல்வர் சோமசுந்தரம் அவர்கள் முன்னிலை வகித்து சிறப்பு செய்தார். பேச்சு, கவிதை,கதை,நாவல், கட்டுரை, நடனம், கிராத் ஒப்புவித்தல், செய்யுள் ஒப்புவித்தல் ,ஓவியம், வண்ணம் தீட்டுதல்,கைவினைப்பொருள் செய்தல் உள்ளிட்ட ஏராளமான திறமைகளை கலந்து கொண்டவர்கள் வெளிப்படுத்தினர்.
உயர்வோம் உயரச்செய்வோம் நிகழ்வானது எவரும் தயக்கமில்லாமல் அவர்களுடைய திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் எந்த வயதினரும் குறிப்பாக கல்லூரி மற்றும் பள்ளியில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்பு இல்லாதவர்களுக்கும் அவர்களின் திறமைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருந்து அறிக்கை வெளியிட்டது. இந்நிகழ்வில் பல திறமையாளர்கள் கலந்து கொண்டு இந்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.வில் குழுமத்தின் செயலர் தஹ்மிதாபானு வரவேற்புரை அளித்தார்.வில் குழுமத்தின் நிறுவனர்- தலைவர்.கவிதாயினி கலைவாணி நிகழ்ச்சி முடிவில் நன்றியுரை நல்கினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print


















