ராமநாதபுரம் மாவட்டத்தில் போகலூர் சத்திரக்குடி போன்ற ஊர்களில் உள்ள கடைகளை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.விஜயகுமார் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு 25,000 ரூ அபராதம் விதிக்கப்பட்டு அபராதமும் 15 நாட்கள் கடைகள் மூடப்பட்டது. மேலும் இரண்டாவது முறையாக புகையிலை விற்று பிடிபட்டால் 50000 ஆயிரம் அபராதமும் 30 நாட்கள் கடையினை மூடப்படும் என்றும் மூன்றாவது முறையாக பிடிபட்டால் 100000 அபதாரம் 90 நாட்கள் கடையினை மூடப்படும் என்றும் அந்தக் கடையில் உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார் மற்றும் காவல்துறை சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.




You must be logged in to post a comment.