இந்திய துணை ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் மாற்றுத் திறனாளிகளின் வீரவணக்க அமைதிப்பேரணி..

ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தின் கீழ் இயங்கும் வெற்றிக்கரங்கள் மாற்றுத்திறனாளிகள் குழு சார்பில் காஷ்மீர் எல்லையில் வீரமரணம் அடைந்த 44-துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற வீரவணக்க அமைதிப்பேரணி நெல்லை மாவட்டம் வீரசிகாமணியில் சிறப்பாக நடைபெற்றது.

வீரவணக்க அமைதிப் பேரணியை சேர்ந்தமரம் காவல் ஆய்வாளர் திரு.கணேசன் (பொறுப்பு) கொடியசைத்து துவக்கி வைத்தார். வீரசிகாமணி அரசு மேல் நிலைப் பள்ளியிலிருந்து துவங்கிய அமைதிப்பேரணி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வரை சென்று நிறைவுற்றது.

இந்திய நாட்டிற்காக உயிர்நீத்த துணை ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் அமைதியாக போக்குவரத்திற்கு எவ்வித இடையூறுமின்றி மாற்றுத் திறனாளிகளின் அமைதி பேரணி நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் கள நிர்வாகி அ.கனகராஜ் ஒருங்கிணைத்தார்.

மேலும் இப்பேரணியில் காவலர் கணேசன், சங்கரன்கோவில் ஒன்றிய களபகுதி நிர்வாகி அ.கனகராஜ், தொழில் பயிற்சி ஆசிரியர் பாலசுப்பிரமணியன் மற்றும் குழு தணிக்கையர் ராஜ்குமார், செய்தித் தொடர்பாளர் அபுபக்கர்சித்திக் மற்றும் மாற்றுத் திறனாளிகள்,பள்ளி மாணவர்கள்,பல்வேறு துறை சார்ந்தவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

பேரணியில் கலந்து சிறப்பித்த காவல்துறை அதிகாரிகள், மாற்றுத்திறனாளிகள், பல்வேறு துறை சார்ந்தவர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி கூறப்பட்டு இனிதே பேரணி நிறைவுற்றது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!