கலைஞர் நூற்றாண்டு விழா வினாடி- வினா போட்டி: வென்ற மாணாக்கருக்கு பரிசு..

இராமநாதபுரம், ஆக.31 – இராமநாதபுரம் அரசு அருங்காட்சியகம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவர் இடையே வினாடி-வினா போட்டி நடந்தது. இதில் 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

செய்யது அம்மாள் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவிகள் எஸ்.வனிதா ஸ்ரீ,  எம்.லோகதர்ஷினி ஆகியோர் முதலிடம்,  செய்யது அம்மாள் மெட்ரிக் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவர்கள் ஆர்.செல்வகுமார், எம். முஹமது ஹசன் கனி ஆகியோர்  இரண்டாம் இடம்,  ராஜா மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர் ஆர்.என்.பெரியார் செல்வன் மூன்றாம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட சுற்றுலா அலுவலர் கே.அருண் பிரசாத் பரிசு வழங்கினார். அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார் வரவேற்றார்.  அருங்காட்சியக  இளநிலை உதவியாளர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார்.  அருங்காட்சியக காவலர் சுரேஷ் நன்றி கூறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!