மதுரையில் 30-வது சாலை பாதுகாப்பு வார பள்ளிகளுக்கான கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா..

30-வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மதுரை மாநகரில் உள்ள 17 பள்ளிகளில் 6 முதல் 8 ம் வகுப்பு மற்றும் 9 முதல் 10 ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு “சாலை பாதுகாப்பும் – சமூக விழிப்புணர்வும்” என்ற தலைப்பில் கட்டுரை போட்டிகள் அந்தந்த பள்ளிகளில் கடந்த 07.02.19 அன்று காலை 10.30 TO 12.30 மணிவரை நடைபெற்றன. இப்போட்டிக்கு மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் Dr.S. பாலகிருஷ்ணன் அவர்கள் நடுவராக நியமிக்கப்பட்டு 6 முதல் 8 ம் வகுப்பு வரை முதல் மூன்று அணியையும் மற்றும் 9 முதல் 10 ம் வகுப்பு வரை முதல் மூன்று அணியையும் தேர்வுசெய்தார்.

மேலும் நேற்று (08.02.19) 09.00 TO 14.00 மணிவரை மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் வினாடி வினா போட்டி 22 அணிகளுக்கு நடைபெற்றன. இப்போட்டிக்கு Dr.சுந்தர்நாதன் M.B.B.S (FUNDA FACTORY) CO-FOUNDER அவர்கள் தலைமை ஏற்று முதல் மூன்று அணிகளை தேர்வு செய்தார். வெற்றிபெற்ற அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இன்று மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் பணம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

கட்டுரை போட்டியில் அதிக மாணவ மாணவிகள் கலந்து கொண்டதற்காக மதுரை மாநகர் கனகவேல் காலனியில் அமைந்துள்ள “GOOD SHEPHERD METRICULATION HIGH.SCHOOL” க்கு சாலை பாதுகாப்பிற்கான சுழற்சி கோப்பையை காவல் ஆணையர் அவர்கள் வழங்கினார்.

செய்தி வி் காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!