“இப்பவே உன்னை தூக்கிச்சென்று காணா பிணமாக்கி விடுவேன்.” உசிலம்பட்டியில் அரைகுறை ஆடையில் வந்து பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த தனியார் பைனான்ஸ் ஊழியர்.

Oplus_0

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் சிந்து.இவருடைய பெயரை பயன்படுத்தி அவருடைய உறவினர் சங்கர் உசிலம்பட்டி அருகே தி.விலக்கிலுள்ள செல்லப்பாண்டி என்பவரின் பைணான்ஸ் கடையில் பணம் பெற்று விட்டு தலைமறைவானார்.இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பணம் கேட்டு செல்லப்பாண்டி பைனான்ஸ் ஊழியர் மதன் என்பவர் சிந்து வீட்டிற்கு அடிக்கடி வந்து மிரட்டியதாகக் கூறப் படுகின்றது.இந்நிலையில் நேற்று இரவில் யாரும் இல்லாத நிலையில் சிந்து வீட்டிற்கு அரைகுறை (ஷாhட்ஸ் டிசர்ட்) வந்த மதன் அவரிடம் பணம் கேட்டுள்ளார்.சிந்து பணம் தற்சமயம் இல்லை என பதிலளிக்க ஆவேசமடைந்த மதன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஆபாச் வார்த்தைகளிலால் திட்டி அவரை அடிக்கச்சென்றுள்ளார்.அதிர்ச்சியடைந்த சிந்து உடனடியாக வீட்டிலிருந்து தன்னுடைய கணவர் கடைக்குச் சென்றுள்ளார்.அங்கும் பின் தொடர்ந்து வந்த மதன் இப்பவே உன்னை தூக்கிச் சென்று காணா பிணமாக்கி விடுவேன் என மிரட்டியதோடு மட்டுமில்லாமல் அவருடைய செல்போனை பறிக்க முற்பட்டுள்ளார்.சிந்து தடுக்கவே கொலை வெறித்தாக்குதலோடு தாக்க முற்ப்பட்டுள்ளார்.இதனை தடுத்த அவரது கணவரையும் என் ஓனர் பெரிய கோடீஸ்வரர்.இந்த நொடியே உன்னையும் உன் கடையையும் பஸ்பமாக்கி விடுவேன் என மிரட்டியுள்ளார்.இதில் பயந்து போன சிந்து உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இது குறித்து போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.இரவில் இளம் பெண்ணை பைனான்ஸ் ஊழியர் மிரட்டிய சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!