திண்டுக்கலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் மாநில செயலாளர் தோழர் சோ.பாலகிருஷ்ணன் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த நாளில் ஏற்பட்ட கஜா புயலின் பாதிப்பில் இருந்து பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் மீளாத நிலை உள்ளது. தற்போது ஆளும் அதிமுக அரசு பாதிக்கபட்ட மக்களுக்கு முழுமையாக நிவாரணம் வழங்கவேண்டும். மத்திய அரசிடம் 1500 கோடி நிவாரணம் கேட்டுள்ள நிலையில் மத்தியில் ஆளும் பிஜேபி அரசு 200 கோடி ரூபாய் மட்டுமே வழங்குவதாக அறிவிப்பு மட்டுமே செய்துள்ள நிலை. மேலும் கணக்கெடுக்கும் பணி இன்னும் நிறைவு பெறாத நிலை உள்ளது. நிறைவடையும் நிலையில் நிவாரண நிதி அனுப்பி வைக்கப்படும் என்று கூறியும் வருகிறது இன்நிலையில் அது எந்த அளவுக்கு சாத்தியப்படும் என்பது தெரியவில்லை. என்றும் கூறியதோடு அதிமுக அரசு புயலால் பாதிக்கப்பட்டு நிற்கதியாய் நிற்க்கும் மக்களுக்கு உடனடியாக உதவிகள் கிடைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று பேட்டியளித்தார். அப்போது கட்சியுனிடைய மாநிலக் குழு உறுப்பினர் தோழர் என்.பாண்டி, மாவட்ட செயலாளர் தோழர் ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ், திண்டுக்கல் .

You must be logged in to post a comment.