இன்று (29.06-2018) வெள்ளிக்கிழமை , சென்னை சேலம் இடையே அமைக்க திட்டமிட்டுள்ள 8 வழி சாலை தொடர்பான செய்தி சேகரிக்கும் பணியில் திருவண்ணாமலை மாவட்டம் நம்பியந்தல் நயம்பாடி கிராமத்தில் சன் செய்தியாளர் செல்வகுமார் மற்றும் ஒளிப்பதிவாளர் வேலு ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். சாலை திட்டத்துக்காக நிலம் அளவீடு செய்யப்படுவதை எதிர்த்து கிராமமக்கள் போராட்டம் நடத்தியதை செய்தி சேகரித்து வந்த நிலையில் அங்கிருந்த மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளார் சின்னராஜ் , ஒளிப்பதிவாளர் வேலு மீது பலப்பிரயோகம் செய்து கீழே தள்ளியுள்ளார். காவல் ஆய்வாளர் சுரேஷ் சண்முகம் செய்தியாளர் செல்வகுமாரை யும் செய்தி சேகரிக்கும் பணியை செய்ய விடாமல் தடுத்துள்ளார்.
காவல்துறையினரின் இந்த அத்துமீறல் போக்கினை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிக்கும் பணியை தடுத்து மிரட்டிய காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.
இதே போல் கடந்த 26.06.2018 செவ்வாய்க்கிழமை அன்று செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாத்ரூபூமி செய்தியாளர் அனுப் தாஸ், ஒளிப்பதிவாளர் முருகன் மற்றும் வாகன ஓட்டுநர் ரசாக் ஆகிய மூவரையும் திருவண்ணாமலை தாலுகா காவல்துறையினர் சிறைப்பிடித்து சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னர் விடுதலை செய்தனர். திருவண்ணாமலையில் மாத்ரூபூமி செய்தியாளர் , ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்டது தொடர்பாக நேற்று (28-06-2018) வியாழன் மாலை தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் திரு. டி.கே.ராஜேந்திரன் ஐ பி எஸ் ஸை சந்தித்துப் பேசினோம். அவரிடம் இது போன்ற சம்பவங்கள் தொடரக்கூடாது என்பதை வலியுறுத்திய 24 மணி நேரத்திற்குள் இது போன்ற சம்பவம் நடந்திருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது.
இந்த விசயத்தில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு பத்திரிகையாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
மேலும் இச்சம்பத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி CHENNAI UNION OF JOURNALIST – சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாகவும் முறையிடப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் முக்கிய தூணான பத்திரிக்கை துறையின் சுதந்திரமே பறிக்கப்படுகின்றது என்றால்.. சாமானியனின் சுதந்திரம்..????

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print













