வீடு மற்றும் வீட்டின் கட்டமைப்பை பரிசோதியுங்கள். எங்கேனும் வெடிப்பு இருந்தால் பூச்சு வேலை செய்தல், கதவுகளின் தாழ்ப்பாள்களை சரி செய்தல் போன்றவற்றை துரிதமாக முடியுங்கள்.
வீட்டுக்கு அருகே இருக்கும் முறிந்த கிளைகள், பட்டுப்போன மரக்கிளை, அதிக எடையுடன் மரக் கிளை இருந்தால் அதனை அப்புறப்படுத்துங்கள்.
வீட்டு மாடி, உயரமான சுவர்களில் இருக்கும் கட்டைகள், பயன்படுத்தாத கண்ணாடி, கண்ணாடிப் பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்தவும்.
பேட்டரிகள், மண்ணெண்ணெய், மெழுகுவர்த்திகள், குடிநீர் கேன்கள், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், அத்தியாவசிய மருந்துகளை வாங்கி வைத்துக் கொள்ளவும்.
பாதி இடிந்த நிலையில் இருக்கும் கட்டடங்களை இடித்துத் தள்ள வேண்டும்.
உலர்ந்த பழங்கள் போன்ற சமைக்காமல் அப்படியே சாப்பிடும் பொருட்களை வாங்கி வீட்டில் பத்திரப்படுத்துங்கள்.
தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்:-
புயல் மற்றும் மழை நிலவரம் குறித்து உடனுக்குடன் அறிந்து கொள்ள வழிவகை செய்து கொள்ளுங்கள்.
மழை, புயல் பற்றி யார் எந்த தகவல் அனுப்பினாலும் அதனை உடனே ஃபார்வேர்ட் செய்யாதீர்கள்.
எங்கிருந்து வரும் தகவல்களை மட்டும் நம்ப வேண்டும், எது உண்மை என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
தவறான தகவல்களை நீங்களாக யாருக்கும் சொல்ல வேண்டாம், எச்சரிக்கிறோம் என்று கூறி அச்சுறுத்த வேண்டாம்.
புயல் கரையைக் கடக்கும் நேரம், மழைப்பொழிவு, காற்றின் வேகம் ஆகியவற்றை அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்கள் வாயிலாக உறுதி செய்து கொள்ளுங்கள்.
புயல் அடிக்கும் நேரத்தில் வானொலி செய்திகளைக் கேட்டுக் கொண்டிருக்கலாம்.
புயல் எச்சரிக்கைப் பகுதிகளை அறிந்து அப்பகுதியில் இருப்பவர்களுக்கு அறிவுறுத்தலாம்.
வழக்கமானப் பணிகளை செய்து கொண்டிருங்கள். எனினும்எந்த விதமான அபாயகட்டத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்.
பொதுவாக புயல் அபாய எச்சரிக்கை என்றால் அடுத்த 24 மணி நேரத்துக்கு அந்த அபாயம் பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வீடு அல்லது நீங்கள் இருக்கும் பகுதிக்குள் தண்ணீர் வரும் என்றால் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லுங்கள். நீரில் மூழ்கும் வரை காத்திருக்காதீர்கள்.
வீடு பாதுகாப்பான இடமாக இருந்து வெள்ளம் சூழ்ந்தால், வீட்டில் உயரமான பகுதியில் இருங்கள்.
கீழ்தளத்தில் இருக்கும் போது வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருந்தால் முக்கியமான பொருட்களை உயரமான இடத்துக்கு இடம்மாற்றுங்கள்.
அடித்துச் செல்லக் கூடிய, பறக்கும் பொருட்களை கட்டி வையுங்கள்.
கண்ணாடி கதவு ஜன்னல்களை மூடி வையுங்கள்.
மின்சாரச் சாதனங்களை மின் இணைப்பில் இருந்து துண்டியுங்கள்.
வீட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டால் மருந்து மாத்திரை, உணவு போன்ற மிக மிக அத்தியாவசியமான பொருட்களை பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் சொத்து, வீடு உள்ளிட்ட பொருட்களை நினைத்து கவலை கொள்ளாதீர்கள். நீங்கள் பத்திரமாக இருப்பதை பற்றி உறுதி செய்யுங்கள்.
நீங்கள் வசித்து வந்த பகுதி பாதுகாப்பானது என்று நிர்வாகம் அறிவிக்கும் வரை முகாமிலேயே தங்கியிருங்கள்.
எந்த நேரத்திலும் அச்சமோ, பயமோ கொள்ளத் தேவையில்லை. எந்த நேரத்தையும் எதிர்கொள்ள ஆயத்தமாக இருங்கள்.
இவ்வாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
செய்தி தொகுப்பு:-
அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர்,
கீழை நியூஸ்(பூதக்கண்ணாடி மாத இதழ் )

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










