மீன் பிடி தடை காலம் நிறைவடைந்ததால் கணவாய் மற்றும் இரால் சீசன் தொடங்கி உள்ளது. அதனை தொடர்ந்து இரவு நேரத்தில் முஸ்லிம் பஜார் பகுதியில் கணவாய் மற்றும் பூச்சி வகையை சார்ந்த இரால் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.

ஒரு கிலோ கணவாய் மற்றும் இரால் 350 இருந்து 400 வரை விற்கப்படுகிறது. தற்போது விற்கப்படும் இரால் மற்றும் கணவாய் வகைகள் கீழக்கரை பாரதி நகர் கடல் பகுதியில் பிடிக்கப்படுகிறது என்பது குறிப்படத்தக்கது.

பேலியோ உணவுகளில் சிறந்தது. நிறைய வெள்ளைபூடு, சின்ன வெங்காயம் பொடி அறிஞ்சி, இரண்டு மாங்காயை வெட்டி போட்டு இறால் ஆக்குன ஜோரூதான் போங்க.
கணவாயில் உருண்டை போட்டோ, பொடியா வெட்டி புளி ஊத்தி ஆக்குண, கொண்ட கொண்டாங்கு.