பிரகாஷ் ராஜுக்கு ஆதரவாக களமிறங்கிய ஜிக்னேஷ் மேவானி!

சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் பிரகாஷ்ராஜ். பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து பேட்டியளித்து பரபரப்பு ஏற்படுத்தினார். அவ்வப்போது டுவிட்டரில் பிரதமருக்கு எதிரகாக கருத்து தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் இன்றைய புத்தாண்டு தினத்தில் அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டது பின்வருமாறு, “ஒவ்வொருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்… ஒரு புதிய வருடத்தின் தொடக்கம். பொறுப்பும் அதிகரித்திருக்கிறது… உங்களது ஆதரவில் வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நான் போட்டியிட உள்ளேன். தொகுதி குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் ” என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், குஜராத் சுயேச்சை எம்எல்ஏ பாஜ்கவுக்கு எதிராக வெற்றி பெற்ற ஜின்கேஷ் மேவானி பின்வருமாறு தெரிவித்துள்ளார். “என்னவொரு செய்தி! பிரகாஷ் ராஜுக்கு வாழ்த்துகள். நாம் இதை செய்து காட்டுவோம். நமக்கு இந்தியாவில் தெரிந்தவர்கள், முக்கியமாக தென்னிந்தியாவில் தெரிந்தவர்கள் எல்லோரும் உங்களுக்காக வருவார்கள். நீங்கள் சாதிப்பீர்கள், நான் இருக்கிறேன் உங்களுக்கு. இந்திய நாடாளுமன்றத்திற்கு நீங்கள் தேவை, குரலற்றவர்களின் குரலாக நீங்கள் இருப்பீர்கள்.”  என்று கூறியுள்ளார்.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!