திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் திருச்சியில் நடத்தப்படும் கண்காட்சியை உடனடியாக நிறுத்த வேண்டும். விவசாயிகள் சொத்துக்கள் அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்க கூடாது. மத்திய அரசு சர்பாசி சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயச் சட்டத்தை கொண்டு வரவேண்டும். இதனை வலியுறுத்தி கடந்த 26-ம் தேதி முதல் பஞ்சாப் மாநிலம் கண்ணுரி பார்டரில் ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் ஜெகசித் சிங் டல்லேபாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ரெயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்

You must be logged in to post a comment.