பட்டணம்காத்தான், ஆர்.எஸ்.மடை உப மின் நிலையங்களில் பராமரிப்பு பணி: நாளை (ஆகஸ்ட் 8) மின் தடை…

இராமநாதபுரம், ஆக.8 – இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட்டாரம் பட்டணம்காத்தன் உப மின் நிலையம் ராம்நாடு உயர் மின் அழுத்த பீடரில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (ஆக.8) நடை பெற உள்ளது. இதனால் காவனூர், தொருவளூர், வயலூர், பனையூர், குளத்தூர், தேர்த்தாங்கல், கிளியூர், முதலூர், கடம்பூர், இல்லுமுள்ளி, வைரவனேந்தல், வீரவனூர், பாப்பாகுடி, வன்னிவயல், கவரங்குளம், தேவிபட்டினம், கழனிகுடி, சித்தார்கோட்டை, பெருவயல், சிறுவயல், நரியனேந்தல், மரப்பாலம், இலந்தை கூட்டம்.

காட்டூரணி, ஆர்.கே.நகர், எம்ஜிஆர் நகர், ரமலான் நகர், மேலகோட்டை, மாடக் கொட்டான், இளமனூர், பேராவூர், தில்லைநாயகிபுரம், பழங்குளம், நாகநாதபுரம், இந்திரா நகர், பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

பட்டணம்காத்தான் துணை மின் நிலையம் பாரதி நகர் மின் பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை ( ஆக.8) நடை பெற உள்ளது. இதனால், பாரதி நகர், நேரு நகர், மகா சக்தி நகர், புளிக்காரத்தெரு, குமரையா கோயில், ஆசிக் கிளினிக், ஜிஎஸ்எம் மால், மற்றும் ஓவிஎஸ் மஹால் அதனை ஒட்டியுள்ள சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

ஆர்.எஸ். மடை துணை மின் நிலையம் டவுன் 1, டவுன் 2 மின் பாதைகளில் நாளை (ஆக.8) மாதாந்திர பராமரிப்பு பணி நடை பெறுகிறது. இதனால் சக்கரக்கோட்டை, சின்னக்கடை, புளிக்காரத்தெரு, பழைய, புதிய பேருந்து நிலையம், கேணிக்கரை சுற்றிய பகுதிகள், தாயுமான சுவாமிகோயில் தெரு, வண்டிக்காரத்தெரு, தங்கப்பா நகர், அண்ணா நகர், அரசு மருத்துவமனை, அரண்மனை, வடக்கு தெரு, நீலகண்டி ஊரணி சுற்றிய பகுதிகள், முதுநாள் ரோடு, சூரன்கோட்டை, இடையார்வலசை, சிவன்கோயில் சுற்றியபகுதிகள், சாலை தெரு, சர்ச், மார்க்கெட், யானைக்கல் வீதி, கே.கே. நகர், பெரியகருப்பன் நகர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என ராமநாதபுரம் நகர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர்.பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!