பெருங்குளம், பனைக்குளம், தொண்டி பகுதிகளில் இன்று (12-10-2023) மின்தடை…

இராமநாதபுரம், அக்.11- ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் துணை மின் நிலையத்தில் இன்று (12.10.2023) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் உச்சிப்புளி, கீழ நாகாச்சி, செம்படையார்குளம், தாமரைக்குளம், இரட்டையூரணி, புதுமடம், இருமேனி, பிரப்பன்வலசை, மானாங்குடி, நொச்சியூரணி. எஸ்.கே.வலசை, பெருங்குளம், வழுதூர், வாலாந்தரவை, குயவன்குடி, ஏந்தல், மொட்டையன் வலசை, வாணியங்குளம், பெருங்குளம் இந்திராநகர்,  பனைக்குளம், ஆற்றாங்கரை, தேர்போகி, புதுவலசை, அழகன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என  ராமநாதபுரம் ஊரக உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதே போல் தொண்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடைபெற உள்ளது. இதனால் தொண்டி, நம்புதாளை, தினையத்தூர், திருவெற்றியூர், கலிய நகரி, முள்ளி முனை, காரங்காடு, எஸ்பி பட்டினம், எம்.ஆர் பட்டினம், பாசிபட்டினம், புதுப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!