ஆர்.எஸ்.மங்கலம், கமுதியில் நாளை மின் தடை..

இராமநாதபுரம், செப்.20- இராமநாதபுரம் மாவட்டம்  ஆர்.எஸ்.மங்களம் துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணி நாளை (செப்.21) நடைபெற உள்ளது. இதனால்  ஆர்.எஸ்.மங்கலம் டவுன். செட்டியமடை, சூரமடை, பெருமாள் மடை தலைக்கான் பச்சேரி, நோக்கங்கொட்டை, சிலுகவயல், ஆவரேந்தல், பாரனூர், கலங்காப்புலி, சனவேலி, சவரியார்பட்டினம், புள்ளமடை, ஓடைக்கால், ஏ.ஆர் மங்கலம், ஆப்ராய், பெத்தனேந்தல், கற்காத்தக்குடி, புத்தனேந்தல் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 வரை மின்சாரம் நிறுத்தப்படும் என திருவாடானை உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

கமுதி உப மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நாளை ( செப்.21) நடைபெற உள்ளது. இதனால் பார்த்திபனூர், அபிராமம், கமுதி முதுகுளத்தூர், பாக்குவெட்டி, செங்கப்படை, பேரையூர், அ.தரைக்குடி, த.புனவாசல், வங்காருபுரம், மண்டலமாணிக்கம் காலை 10.மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் விஜயன் தெரிவித்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!