மண்டபம் துணை மின் நிலையத்தில் சிறப்பு பராமரிப்பு பணி: ஆக. 7, 8 ல் மின் தடை..

இராமநாதபுரம், ஆக.5 – ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் துணை மின் நிலையம் அரியமான் முதல் ராமேஸ்வரம் வரை உயர் மின்னழுத்த பாதையில் சிறப்பு பராமரிப்பு பணி ஆக.7, ஆக.8 ஆம் தேதிகளில்  நடைபெற உள்ளது.

இவ்விரு நாளில்,  மண்டபம் பகுதியில் 98 இடங்களில் உள்ள மரங்கள்,  ராமேஸ்வரம் பகுதியில் 230 இடங்களில் உள்ள மரங்கள் அகற்றப்பட உள்ளன. மேலும்  ராமேஸ்வரம் பகுதியில் 58 இடங்களில்  பழுதான மின் கம்பங்கள்,  மண்டபம் பகுதியில் 117 இடங்களில் பழுதான மின்கம்பங்கள் அப்புறப்பட உள்ளன. இத்தகைய சிறப்பு பணியின் காரணமாக அரியமான், சுந்தரமுடையான், உடையார்வலசை, நடுமனைக்காடு, இடையர்வாடி, வேதாளை, மரைக்காயர் பட்டினம், மண்டபம், மண்டபம் முகாம், பாம்பன், அக்காள்மடம், ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் , நீதிமன்றம், திட்டகுடி, கோவில், வேர்க்கோடு, புது ரோடு, தங்கச்சிமடம், ஆத்திக்காடு, சத்யா நகர், செம்மமடம், மெய்யம்புளி, பொந்தபுளி, ராமர்தீர்த்தம் வடக்கு, தெற்கு, மார்க்கெட் தெரு, பருவதம், பாரதி நகர், முருங்கை வாடி, எம்.ஆர்.டி.நகர், கரையூர், மல்லிகை நகர், ரயில்வே பீடர் ரோடு, பேக்கரும்பு , அரியான்குண்டு, மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் இவ்விரு நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 5:30 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என ராமநாதபுரம் ஊரக  உதவி செயற் பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!