இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (19.12.2024) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் அரியமான், சுந்தரமுடையான், வேதாளை, மரைக்காயர்பட்டினம், மண்டபம், பாம்பன், அக்காள்மடம், தங்கச்சிமடம், அரியாங்குண்டு, ராமேஸ்வரம், வடகாடு, வேர்க்கோடு, புதுரோடு, சம்பை, ஓலைக்குடா பகுதிகளில் நாளை காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என ராமநாதபுரம் ஊரக உதவி செயற்பொறியாளர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
முதுகுளத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு காரணமாக முதுகுளத்தூர், மேலசாக்குளம், கீழச்சாக்குளம், மேலகன்னிசேரி, ஆத்திக்குளம், காக்கூர், புளியங்குடி, ஆதனகுறிச்சி, கீழ, மேலத்தூவல், விளங்குளத்தூர், வெங்கலக்குறிச்சி, கீழகன்சிசேரி, பெருங்கருணை, நல்லூர், கீரனூர், ஆனைசேரி, மணலூர், ஆரபத்தி, மணிபுரம், விக்கிரபாண்டிபுரம் பகுதிகளில் நாளை (19/12/2024) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
கடலாடி துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக சாயல்குடி, நரிப்பையூர், கன்னிராஜாபுரம், மாரியூர், முந்தல், மலட்டாறு, செவல்பட்டி, தரைக்குடி, கடுகுசந்தை, மடத்தாகுளம், பெருநாழி, குருவாடி, பம்மனேந்தல், T.M.கோட்டை, துத்திநத்தம், கடலாடி, ஏனாதி, கீழசிறுபோது, மேழசிறுபோது, பொதிகுளம், ஆப்பனூர், ஒருவனேந்தல், தேவர்குறிச்சி, புனவாசல், சவேரியார்பட்டினம், மீனாங்குடி, குமாரக்குறிச்சி பகுதிகளில்நாளை காலை 10 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும என முதுகுளத்தூர் உதவி செயற் பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment.