இராமேஸ்வரத்தில் மீனவ மக்களின் கோரிக்கை ஏற்பு : போராட்டம் ஒத்திவைப்பு…

இராமநாதபுரம், ஜன.9 ராமேஸ்வரம் நகராட்சி சேராங்கோட்டை, தெற்கு கரையூர், சேதுபதி நகர் கிராம மக்களுக்கு 3 தலைமுறைக்கு மேலாக வீட்டுமனை பட்டா வழங்கப்படாததால் வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஒப்படைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெற்றது. ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு தலைமை வகித்தார். 

ராமேஸ்வரம் வட்டாட்சியர் பாலகிருஷ்ணண், காவல் துணை கண்காணிப்பாளர் உமாதேவி, சார்பு ஆய்வாளர் ஸ்ரீராம், கடல் தொழிலாளர் சங்க (சிஐடியு) மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி, சிஐடியு மாவட்ட பொதுச்செயலாளர் சிவாஜி,  மாவட்ட துணை தலைவர் சுடலைக்காசி, மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரபாபு , மீனவ மகளிர் சங்க நிர்வாகி சகாயம் பீட்டர், கிராம தலைவர்கள் நம்புராஜன், பாலசுப்ரமணியன், தவசியாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மூன்று கிராம மக்களுக்கு 6 மாத த்திற்குள் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் 3 கிராமங்களையும் வனத்துறை வசம் இருந்து வருவாய்த்துறை கற்கும் வகை மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  மக்களின் பயன்பாட்டில் உள்ள வீடுகள் சேதமடைந்தால் புதுப்பிக்க வனத்துறை இடையூறு செய்வதில்லை உறுதி அளிக்கப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!