இராமநாதபுரம் மாவட்ட அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளராக நாகர்கோவில்பணியாற்றிய வீரபுத்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து இராமநாதபுரத்தில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, “நான் நாகர்கோவிலில் முதுநிலை அஞ்சலக அதிகாரி யாக பணியாற்றி பணிமாறுதலில் தற்போது இராமநாதபுரம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளேன்.
இந்திய அஞ்சல் துறையின் ஒரு மைல்கல்லாக இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் வங்கி சேவையை பிரதமரால் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து பொதுமக்களும் நிதி சேவை கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய ரிசர்வ் வங்கி அஞ்சல் துறைக்கு வங்கி சேவையை அனுமதி அளித்துள்ளது.
இதன் 650 கிளைகளையும் ஒருசேர webcasting மூலம் அனைத்து பொதுமக்களும் பார்க்கும்படி லைவ் ஸ்ட்ரீமிங் செய்து பாரதப்பிரதமர் உரையாற்றுகிறார். இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் ஆனது ரூபாய் ஒரு லட்சம் வரை இருப்பு தொகை கொண்ட சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகள் ஆர்டிஜிஎஸ், ஐஎம்பிஎஸ், இன்டர்நெட், கைபேசி மிஸ்டு கால், எஸ் எம் எஸ் ,வி கே டிஜிட்டல் முறையில் பணத்தை பெறுவதற்கான சேவைகள் மற்றும் தேர்ட் பார்ட்டி சேவைகளான காப்பீடு, பரஸ்பர நிதிகள், ஓய்வூதியம், சர்வதேச பண பரிமாற்றங்கள் ஆகியவற்றை வழங்க இருக்கிறது.
இதில் கணக்கு துவங்க சான்றுகளோ, புகைப்படமோ தேவையில்லை. தங்களின் ஆதார் கொண்டு பத்தே நிமிடங்களில் கணக்கு தொடங்கிய உடன் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும், எனவே பொதுமக்கள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் இன் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள், என அவர் கூறினார்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print










